நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை ஒழிக்க அரசாங்கம் கொள்கை அடிப்படையில் செயற்படுகிறது.
நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை முற்றாக இல்லாதொழிப்பதற்கான கொள்கை ஒன்றின் அடிப்படையில் தற்போதைய தேசிய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதாக ஐக்கிய நாடுகளின் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற உரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள சிறந்த செயற்பாடுகள் தொடர்பாக விசேட பிரதிநிதி சமர்பித்துள்ள விடயங்கள் தொடர்பில் இலங்கை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இதேபோன்று இலங்கை அரசாங்கம் மனித உரிமையை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல், நல்லிணக்கம் தொடர்பாக முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தெளிவுபடுத்தியிருந்தார்.
சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எதிரான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த நடைபவனியில் ஜனாதிபதி கலந்து கொண்டமை அரசாங்கம் கடைப்பிடித்துள்ள கொள்கைக்கு ஊக்கமளிப்பதே ஆகும் என்று ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.