பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவின் அரசியல் பயணம்
கனடாவின் இளம்வயது பிரதமரான ஜெஸ்டின் ட்ரூடோ, அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வான்கூவரில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.
முன்னாள் பிரதமரான Pierre Trudeau இன் இறப்புக்கு பின்னர், கடந்த 2008ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார்.
அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பப்பினோ தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்ற ட்ரூடோ, பின்னர் லிபரல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். இதைதொடர்ந்து அவர் 2013ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவரானார்.
அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, 184 இடங்களை வெற்றி பெற்று கனேடிய பிரதமரானார். 45 வயதான ஜெஸ்டின் ட்ரூடோ, தற்போது உலக தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.