பிரபலங்களை கொச்சைப்படுத்தும் உச்சக்கட்ட தாக்குதல்! டிவிட்டர் பக்கம் முடக்கப்படுமா?
பிரபலங்கள் எது செய்தாலும் உடனடியாக மற்றவர்களால் உற்று நோக்கப்படும். புகழை காட்டிலும் டேமேஜ் செய்வது மிகவும் எளிதாக நடந்து வருகிறது.
சமீபகாலமாக பாடகி சுஜித்ராவின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு பிரபலங்களின் மீது கருத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால் இன்று அவர்களின் சில நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. சுஜித்ரா சைபர்கிரைமில் புகார் தெரிவித்தாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது மிகவும் உச்சக்கட்டமாக பிரபல நடிகைகளின் நிர்வாண புகைப்படங்கள் வரிசையாக வெளியிடப்படுகிறது. இன்னும் பல முன்னணி நட்சத்திரங்களின் அந்தரங்கங்கள் நாளை வெளியாகும் என அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் இந்தப்பக்கம் ஏன் முடக்கப்படாமல் இருக்கிறது என்பதே பலரின் கேள்வியாகவுள்ளது.