பிரித்தானியாவில் தம்பதிகளுக்கு இலவசப்பணம்! பெற்றுக் கொள்வது எப்படி?
பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியா நீங்கள்? இலவச பணம் பெற்றுக் கொள்ள ஆசையா? அட.. ஈஸியான வழிமுறை இருக்கே!!!
ஆம், திருமணமான தம்பதிகள் வருடத்திற்கு £200 மேல் பணம் பெற்றுக் கொள்ள முடியும், இந்த பணத்தை வரிச்சலுகைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமணக் கொடுப்பனவு(Marriage allowance) என்னும் இந்த பண ஒதுக்கீடு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
எனினும் அனைத்து வகையான திருமண அல்லது சட்டரீதியான தம்பதியினராலும் இச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியாது.
இதற்கான தகுதிகள்
- திருமணம் ஆனவர்/ சட்டப்பூர்வமான உறவில் இருத்தல் வேண்டும்.
- உங்களில் ஒருவர் அடிப்படை வரி செலுத்துபவராக இருக்க வேண்டும்(£43,000- க்கும் குறைவாக சம்பாதிக்க வேண்டும்),
- மற்றொருவர் வரிகட்டாதவராக அதாவது £11,000 க்குக் குறைவாக வருமானமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
- தம்பதிகள் இருவரும் 6 ஏப்ரல் 1935ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
இதற்கு நீங்கள் தகுதி உடையவராக இருந்தால் இப்பணத்தை Gov.uk என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பித்து இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டிற்கான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும், அப்படியென்றால் £432 பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுபற்றிய மேலதிக ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெற கீழே குறிப்பிட்டுள்ள அலுவலரை தொடர்பு கொள்ளவும்.
Amity Chartered Certified Accountants
email: [email protected]
Tel: 02089528989

