ஒட்டாவா சமூகத்தை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ள 8 வயது சிறுவனின் மரணம்?

ஒட்டாவா சமூகத்தை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ள 8 வயது சிறுவனின் மரணம்?

கடந்த வாரம் பாடசாலையில் இருக்கும் போது எட்டு வயது மாணவன் ஒருவன் இறந்து விட்டான். இவனது மரணத்தால் ஒட்டாவா சமூகமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. மரணத்திற்கு  ஒரு மருத்துவ அவசரநிலை மட்டுமே காரணம் என விபரிக்கப்பட்டுள்ளது.

எட்டு வயதுடைய கிரிவின் மார்ட்டின் என்ற மாணவன் ஒட்டாவா ஓரிலியன்ஸ் வூட் தொடக்க பள்ளியில் வெள்ளிக்கிழமை இறந்து விட்டான்.
வெளிப்படையாக ஆரோக்கியமான இந்த சிறுவனின் மரணத்தை சுற்றி மாறுபட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

மருத்துவ அவசர நிலைமை மரணத்திற்கு காரணம் என ஒட்டாவா-காள்டன் மாவட்ட பாடசாலை சபை தெரிவித்த போதிலும் இச்சோக நிகழ்விற்கு கூறப்பட்ட காரணம் திட்ட வட்டமாக தவறானதென ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த தினம் ஒரு வழக்கமான பாடசாலை தினம் என்றும் அறிவிக்கப்பட்ட அல்லது கண்காணிப்பு நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் மருத்துவ பிரச்சனைகளிற்கு முன்னர் எதுவித விபத்தோ அல்லது சம்பவமோ இடம்பெறவில்லை என பாடசாலை சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மூன்றாம் வகுப்பு வரை குறிப்பிட்ட பாடசாலையில் படிக்கும் பிள்ளைகளிற்கு திங்கள்கிழமை ஆசிரியர்களினால் மதித்துணை வழங்கப்பட்டது.
இச்சம்பவத்தால் சமூகமே ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *