சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த இரு துருக்கியர்கள் கைது!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வைத்து துருக்கி இனத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸாரால் (RCMP) கைது செய்யப்பட்டதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட இருவரும் அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமான முறையில் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்குள் நுழைந்ததாகவும் அதனாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த கனேடிய பொலிஸார், “கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இருவரும் தற்போது எமது காவலிலேயே உள்ளனர். அவர்கள் நாங்கள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு ஒத்துழைத்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் மொழி தொடர்பான பிரச்சினைகள் இருப்பதால், அவர்கள் கனடாவில் நிரந்தர இருப்பிடம் கோரும் நோக்கில் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்குள் நுழைந்தனரா என்பது தொடர்பில் போதிய விளக்கம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
dpuf