ரொறொன்ரோவில் அதிகாலை இடம்பெற்ற இரு வேறு வாகன விபத்துக்கள்!

ரொறொன்ரோவில் அதிகாலை இடம்பெற்ற இரு வேறு வாகன விபத்துக்கள்!

1-ரொறொன்ரோ-ஸ்காபுரோவில் இடம்பெற்ற 4-வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர்காயமடைந்துள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமை அதிகாலை 3.05மணியளவில் இவ்விபத்து எக்லிங்ரன் அவெனியு கிழக்கு டன்வோர்த் வீதியில் நடந்துள்ளது.
விபத்திற்கான காரணத்தை அறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் நொருங்கிய சிதறல்கள் சாலை பூராகவும் சிதறி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகம் அல்லது போதையில் வாகனம் செலுத்தியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுவதாக அறியப்படுகின்றது.

fourfour1four2
2-] 7பேர்களை வைத்தியசாலைக்கு அனுப்பிய நெடுஞ்சாலை 401 40வாகன மோதல்கள்!
ரொறொன்ரோ-நெடுஞ்சாலை 401ல் இடம்பெற்ற 40வாகனங்கள் சம்பந்தப்பட்ட மோதல் ஞாயிற்றுகிழமை அதிகாலை ஏழு பேர்களை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளது என அவசர மருத்துவசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நெடுஞ்சாலை 401கிழக்கு பாதை மற்றும் மேற்கு பாதை கடுகதி லேன்களில் அவெனியு வீதி கிழக்கில் அதிகாலை 1மணியளவில் இடம்பெற்றதாக ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒருவரின் தாடை உடைந்ததுடன் நினைவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரொறொன்ரோ துணை மருத்துவசேவைகள் ஆணையர் ஜேமி றொட்ஜெர்ஸ் தெரிவித்துள்ளார்.

high

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *