கனடாவில் பயங்கரம்: பெண்ணை கொன்று சடலத்தை பெட்டியில் மறைத்து வைத்த கொடூரம்

கனடாவில் பயங்கரம்: பெண்ணை கொன்று சடலத்தை பெட்டியில் மறைத்து வைத்த கொடூரம்

கனடாவில் பெண்ணை கொலை செய்து சடலத்தை பீப்பாய் பெட்டியில் அடைத்து வைத்திருந்த 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் Manitoba மாகாணத்தில் வசித்து வருபவர் Jennifer Barrett (42), இவர் வசிக்கும் வீட்டில் அவருடன் Jessica (34) Holley (28) மற்றும் Perez (43) ஆகிய மூன்று ஆண்கள் தங்கியிருந்தனர்.

இந்த மூன்று நபர்களுக்கும் Jenniferக்கும் என்ன உறவு முறை என தெரியவில்லை.

இதனிடையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் Jenniferருடன் ஏற்பட்ட தகராறில் மூன்று நபர்களும் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் சடலத்தை பீப்பாய் பெட்டிக்குள் மறைத்து வைத்ததுடன் மூவரும் தலைமறைவாகியுள்ளனர்.

சில தினங்களில் சடலத்தில் இருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து அந்த வீட்டின் அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் சடலத்தை வந்து கைப்பற்றியுள்ளனர்.

பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகளையும் பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இதில், Perez என்பவன் முக்கிய குற்றவாளி என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *