சலுகைகள் கோரிக்கைகளில் முறைகேடுகள் காரணமாக 31 சென்.மைக்கல் வைத்தியசாலை ஊழியர்கள் நீக்கம்.
ரொறொன்ரோ-சென்.மைக்கல் வைத்தியசாலை 31 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சலுகைகள் கோரிக்கைகளில கிட்டத்தட்ட 200,000டொலர்கள் முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடரந்து இப்பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இம்முறைகேடுகள் சுகாதார சலுகைகள் கோரிக்கையில் வழக்கமான கணக்காய்வு இடம்பெற்ற சமயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என பேச்சாளர் லெஸ்லி செப்பேர்ட் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பணிநீக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் என்ன பதவிகளில் இருந்தனர் என்பது தெரியவரவில்லை.
சென்.மைக்கல் வைத்தியசாலையில் 6,000ற்கும் மேற்பட்டவர்கள்- 1,689 மருத்துவ தாதிகள் மற்றும் 812 மருத்துவர்கள்-உட்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.