சசிகலா சிறைக்கு செல்லும் காட்சி…கூடி நின்று கதறி அழுத குடும்பம்: வைரலாகும் வீடியோ!
சொத்து குவிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக சசிகலா மற்றும் இளவரசியை பொலிசார் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
1991 முதல் 1996 ஆகிய காலக்கட்டங்களில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் தொடர்புடையதால், அவர்களுக்கும் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்தது.
இதனால் சசிகலா இன்று பெங்கரூ அக்ரஹாரா சிறைக்கு சென்றார். பெங்களூரு செல்வதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை வகுத்துக் கொண்ட சசிகலா அதுகுறித்து உறவினர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறை சொல்ல இருப்பதால் சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, இளவரசி மகன் விவேக், மருமகன், இளவரசியின் மகள்கள், சுதாகரனின் குடும்பத்தார் என அனைவரும் சசிகலாவை சுற்றி உட்கார்ந்து கொண்டு சோகமே உருவாக இருந்தனர்.
சசிகலா புறப்படுவதற்கு சற்று முன் சசிகலா உள்பட ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கதறி அழுததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசியை காவல்துறையினர் சிறைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காவல்துறை சூழ்ந்திருக்க, சசிகலா மற்றும் இளவரசி இருவரும் நடந்தே சிறைக்கு சென்றனர்.