Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உணவுக்கு பணம் செலுத்தாத Burger King ஊழியர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

February 15, 2017
in News
0
உணவுக்கு பணம் செலுத்தாத Burger King ஊழியர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

உணவுக்கு பணம் செலுத்தாத Burger King ஊழியர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

பிரிட்டிஷ் கொலம்பியா Burger King ல் பெண் ஊழியர் ஓருவர் மீன் சான்விட்ச் கொம்போ ஒன்றை பணம் செலுத்தாமல் வீட்டிற்கு எடுத்துசென்ற விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டில் வன்கூவரில் சமையல் பணியாளராக வேலை செய்த உஷா ராம் என்பவர் விரைவு உணவு உரிம குழுமத்தை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளார்.

கடமையில் இருந்த மனேஜர் பணம் செலுத்தாமல் உணவை வீட்டிற்கு எடுத்து செல்லலாம் என அனுமதி கொடுத்திருந்தார் என ராம் வாதாடியுள்ளார். வன்கூவர்-கிரான்வில் விரைவு-உணவு இணை உரிமையாளர் நீதி மன்றத்தில் தனக்கு தானே ஆஜராகி ராம், யாயாபா சல்மன் என்ற மனேஜர் கடமையில் இருந்த சமயம் எடுத்து சென்றதை தன்னால் ஏற்று கொள்ள முடியாதென தெரிவித்துள்ளார்.

55-வயதுடைய ராம் 1987 ல் விஜியிலிருந்து கனடா வந்தவர். 8-ம் தரம் வரையிலான கல்வி அறிவு கொண்டவர். அடிப்படை ஆங்கில அறிவுடையவர். மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியளித்துள்ளார்.

1989ல் மொஹமட் என்பவரின் கீழ் பேர்கர் கிங்கில் பணிபுரிய ஆரம்பித்தவர். பேர்கர் கிங்கின் பல கிளைகளில் பணிபுரிந்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட கிளையில் வேலை செய்து வந்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட போது முழு நேர பணியாளாக குறைந்த பட்ச ஊதியத்திற்கு பணிபுரிந்து வந்துள்ளார். வேலை ஆரம்பித்த நாளிலிருந்து இடைநிறுத்தப்படும் வரை பணிபுரிந்த இவரின் வருடாந்த சம்பளம் 21,000 டொலர்கள் மட்டுமே.

சிறந்த திறமையான எந்தவித நடத்தை குறித்த அறிக்கை எதுவுமின்றி கடமை புரிந்தவரென மொஹமட் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். இறுதியாக 2013 ல் இவரை பணிநீக்கம் செய்யு முன்னர் வேலை முடிந்து வீடு செல்லும் போது கடமையில் இருந்த மனேஜர் சல்மனிடம் மீன் சான்விச்சை வீட்டிற்கு எடுத்து செல்லலாமா என கேட்டதாகவும் அதே சமயம் தன்னிடம் அப்போது பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவரும் உடன்பட்டுள்ளார். மனேஜர் உடன்பட்டால் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது அரை-விலையில் பணி முடிந்து செல்கையில் எடுத்து செல்ல முடியும். ஊழியர் கொள்கைகளை புரிந்து கொள்வதில் வித்தியாசமான விளக்கங்கள் கொண்ட சாட்சியங்கள் பகிரப்பட்டதை நீதிபதி கவனித்துள்ளார்.

பணம் செலுத்த தவறியதால் சல்மன் ராம் திருடி என கூறியதுடன் வேலையை விட்டு வெளியேறுமாறும் தெரிவித்துள்ளார். இதனால் ராம் மன உழைச்சலிற்கு ஆளானார்.

இவற்றை எல்லாம் கேட்டறிந்த பிரிட்டிஷ் கொலம்பிய உச்ச நீதிமன்ற நீதிபதி ராமிற்கு சரியான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை எனவும் தவறான தகவல் பரிமாற்றம் அனைத்திற்கும் காரணம் எனவும் தெரிவித்தார்.

சகலவற்றையும் கருத்தில் கொண்டு ராமிற்கு பொது இழப்பீடாக 21,000 டொலர்கள், அவரது ஓருவருட சம்பளம் மற்றும் 25,000 டொலர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டதால் உணர்வு ரீதியான கொந்தளிப்பிற்கு ஆளானதால் மோசமான பாதிப்படைந்திருப்பதால் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Tags: Featured
Previous Post

உணவிற்கு பணம் செலுத்தாத 24வருடங்கள் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு நடந்த சோகம்!

Next Post

பிரம்ரன் வீட்டு தீயில் மூவர் மரணம்.சிறுமி படுகாயம்!

Next Post
பிரம்ரன் வீட்டு தீயில் மூவர் மரணம்.சிறுமி படுகாயம்!

பிரம்ரன் வீட்டு தீயில் மூவர் மரணம்.சிறுமி படுகாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures