Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2030 ஆம் ஆண்டு பூமிக்கு நேரவிருக்கும் மாபெரும் ஆபத்து! அச்சுறுத்தும் ஆய்வுகள்…

February 13, 2017
in News, Tech
0
2030 ஆம் ஆண்டு பூமிக்கு நேரவிருக்கும் மாபெரும் ஆபத்து! அச்சுறுத்தும் ஆய்வுகள்…

2030 ஆம் ஆண்டு பூமிக்கு நேரவிருக்கும் மாபெரும் ஆபத்து! அச்சுறுத்தும் ஆய்வுகள்…

பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030 ஆம் ஆண்டு பூமிக்கு ஆபத்து நேரிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் குடியிருந்துவரும் இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல பூமி என்னும் கோளத்தைச் சுற்றி இருக்கும் காந்தத்திலும் இரு துருவங்கள் உண்டு.

வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆய்வாளர்கள் காலங்காலமாக ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது.

பூமியின் காந்த மண்டலம்தான் சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களில் இருந்து நம்மை காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும்.

காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும்.

அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.

இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது என விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் தற்போது கவலை அடந்துள்ளனர்.

2030 ஆம் ஆண்டு இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர்.

கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது. துருவங்கள் மாறும் இந்த நாலு லட்சம் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட இந்துக்கள் கூறும் கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது.

இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:

  • கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்
  • த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்
  • த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
  • கலியுகம் – 432, 000 ஆண்டுகள்

நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர்

இதனால் தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிகின்றனர். இதை மாக்னெட்டோகெடான் என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

Tags: Featured
Previous Post

கூகுள் அதிரடி தடை உத்தரவு!

Next Post

யாழில் வெடிகுண்டு நாடகம்! பிரான்ஸில் சிக்கிய இராணுவ உளவாளி! மைத்திரியின் திடீர் முடிவு

Next Post

யாழில் வெடிகுண்டு நாடகம்! பிரான்ஸில் சிக்கிய இராணுவ உளவாளி! மைத்திரியின் திடீர் முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures