எதிர்பாராத ஏற்றத்தை எட்டியுள்ள கனடாவின் வேலை வாய்ப்பு!
ஒட்டாவா-கனடாவின் தொழிலாளர் சந்தை கடந்த மாதம் எதிர்பாரத விதமாக 483,000 வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறியவந்துள்ளது. பகுதி-நேர மற்றும் தனியார்-துறை வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
ஜனவரி மாதத்தின் கனடா வேலை வாய்ப்புதுறை புள்ளிவிபரவியல் கணக்கெடுப்பு வந்துள்ளது.32,400 மேலதிக பகுதி-நேர வேலை வாய்ப்புக்கள் மற்றும் 15,800வேலை வாய்ப்புக்கள்- முழு நேரமாக விரும்பத்தக்கவகையான வேலை வாய்ப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனியார் துறை வேலை வாய்ப்புக்கள் 32,400 டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கண்டுபிடித்துள்ளது. தனியார் துறை வேலை வாய்ப்புக்கள் 7,700 மேலதிகமாக அதிகரித்துள்ளதாக கருதப்படுகின்றது.
டிசம்பரில் வேலையின்மை விகிதம் 6.9சதவிகிதத்திலிருந்து 6.8சதவிகிமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பெரும்பான்மையான புதிய வேலை வாய்ப்புக்கள்-42,600-சாதனங்கள் துறையில் உருவாக்கப்பட்டுள்ளதென கனடா புள்ளி விபரவியல் தெரிவிக்கின்றது.
நாட்டின் வேலை சந்தையின் அதிகரிப்பு கடந்த ஆறு மாதங்களில் அறிக்கைகளில் ஐந்து மாதங்கள் அதிகரிப்பு கண்டுள்ளது.