ஐந்து வருடங் காணாமல் போன கனடியர் அமேசான் மழைக்காடுகளிற்கு கண்டுபிடிக்கப்பட்டார்
ரொறொன்ரோவை சேர்ந்த 39-வயதுடைய மனிதர் ஒருவர் 2012ல் காணாமல் போய்விட்டார். காணாமல் போனவர் திரும்புவதற்காக இவரது சகோதரர் நிதி உதவிக்காக ஒரு crowdfunding பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
அன்ரன் பிலிப்பா எனப்படும் இவர் அமேசான் பகுதியில் பெரிய நகரம் ஒன்றின் நெடுஞ்சாலையில் அலைந்து திரந்து கொண்டிருக்கையில் நவம்பர் 28ல் கண்டுபிடிக்கப்பட்டார்.
குழப்பமடைந்த நிலையில் பதட்டத்துடனும் பேச முடியாத நிலையிலும் காணப்பட்டார். அவ்விடத்திற்கு சென்ற பொலிசாரிடம் தனது அடையாளங்கள் எதையும் தெரிவிக்க முடியாது திணறியதாக கூறப்படுகின்றது.
அதிகாரிகள் இவர் குறித்த தகவல்களை பிரேசிலியாவில் உள்ள கனடிய தூதரகத்திற்கு வியாழக்கிழமை முகநூல் தகவல் மூலம் தெரிவித்துள்ளனர்.
இவர் குற்ற செயல்கள் எதுவும் செய்யாததால் பொலிசாரால் இவரை காவலில் வைக்க முடியவில்லை.
கனடிய தூதரகம் இவரை அன்ரன் பிலிப்பா என அடையாளம் கண்டு இவரது சகோதரரான ரொறொன்ரோவில் வசிக்கும் ஸ்ரெவானிற்கு தகவல் தெரிவித்தனர்.
இவர் அலைந்து திரிந்த பகுதி பாம்பு ,சிறுத்தைகள், முதலைகள் போன்ற பெரிய கொடிய விலங்குள் நடமாடும் பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 3 சகோதர் ஸ்ரெவான் பிரேசில் சென்று தனது சகோதரருடன் இணைந்து கொண்டார்.
வன்கூவரில் வசித்து வந்த தனது சகோதரர் அன்ரன் ஒரு நீண்ட கால வறுமை எதிர்ப்பு ஆர்வலர் மற்றும் வன்கூவர் மொன்றியல் மற்றும் ரொறொன்ரோ தீவிர வாத சமூகங்களின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித தகவலும் இன்றி 2012ல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை கலங்க வைத்துவிட்டு காணாமல் போய்விட்டார் என சகோதரர் தெரிவித்தார்.
தான் உயிரோடு திரும்பி வந்து குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாக அன்ரன் தெரிவத்தார்.