உலகிலேயே பிரான்ஸ் தான் நம்பர் 1: எதில் தெரியுமா?
உலகிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் பிரான்ஸ் நாடு முதலிடமாக உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் Jean-Marc Ayrault விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், போன வருடம் 83 மில்லியன் மக்கள் பல்வேறு நாட்டிலிருந்து பிரான்ஸ்க்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஆனால் 2015ல் 85 மில்லியன் அளவு மக்கள் வந்ததாகவும், எண்ணிக்கை சிறிது குறைந்தாலும் சுற்றுலா விடயத்தில் பிரான்ஸ் தான் மீண்டும் முதலிடத்தில் உள்ளதாக Ayrault கூறியுள்ளார்.
பிரான்ஸ் சுற்றுலா துறை மூன்று வருடங்களுக்கு முன்னர் 2020க்குள் 100 மில்லியன் அளவு சுற்றுலா பயணிகளை பிரான்ஸ் ஈர்க்க வேண்டும் என கூறியிருந்தது.
2015ல் நவம்பர் மாதத்தில் பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் நடத்தியதில் 130 கொல்லப்பட்டனர். இதனால் 2016ல் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சிறிதளவு குறைந்ததாக நம்பப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாரீஸ் தேவாலயத்தில் 29 வயது நபர் ஒருவர் கத்தி குத்தி தாக்குதல் நடத்தினார்.
அவர் தீவிரவாதியா என பொலிசார் இன்னும் உறுதிசெய்ய்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.