சசிகலாவுக்கு எதிராக 12 எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதம்? பெருகும் ஓபிஎஸ் ஆதரவு
தமிழ்நாட்டில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரெசார்ட்டில் 12 எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா தரப்பு வழங்கிய விருந்து உபச்சாரங்களை புறக்கணித்துவிட்டு 12 பேரும் உண்ணாவிரதம் இருக்கின்றனராம்.
அனைத்து எம்எல்ஏ-க்களையும் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி என்பவர் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி யாரும் செல்போனில் தொடர்பு கொள்ளாதவாறு ஜாமர்களை வைத்து செல்போன் சிக்னலை முடக்கியுள்ளனர்.
கேபிள் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு சசிகலா தரப்பு எம்எல்ஏ-க்களை பத்திரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே மன்னார்குடி கோஷ்டிகள் ரெசார்ட் பக்கம் வரும் வாகனங்களை தடுத்துநிறுத்துவதாகவும் புகார்கள் எழுகின்றன, இதனால் பொதுமக்களும் கடும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர்.