பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு! டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை மூடப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பேர்ட்டா அருகே புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவினால் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலை மூடப்பட்டது.
அதிகாலை 3மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சரிவிற்குள் டிரக்டர்-டிரெயிலர் ஒன்று அகப்பட்டு கொண்டது. ஆனால் சாரதி பனிச்சரிவிற்குள் அகப்பட்டு கொள்ளாது முயன்று தப்பிவிட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியா சாரதிகள் நிலைமைகளை அவதானிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
கனரக இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதைகள் சுத்திகரிக்கப்படுகின்றன.
நெடுஞ்சாலை வெகு விரைவில் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.