கனடாவில் ஆறு கைக்குழந்தைகளை சேமிப்பு பெட்டகங்களில் அப்புறப்படுத்திய பெண்?
கனடா-வினிபெக், பெண் ஒருவர் ஆறு குழந்தைகளை முழுமையாக அல்லது குறைந்த மாதத்தில் ரகசியமாக பிரசவித்து அவர்களின் எச்சங்களை ஒரு U-Haul பாதுகாப்பு பெட்டகத்தில் மறைத்து வைத்தார் என நீதிபதி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாகாண நீதிமன்ற நீதிபதி முரே தொம்சன்Andrea Giesbrecht என்ற பெண் இறந்த குழந்தையின் உடலை மறைத்தார் என அவர் மீது ஆறு குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு வருடங்கள் ஜெயில் தண்டனை.
இக்குழந்தைகள் உயிருடன் பிறந்தவை போன்று இருப்பதாக தெரிவித்த அவர் இவைகள் மோசமாக சிதைவடைந்திருந்தமையால் அனைவரும் எவ்வாறு இறந்திருப்பர் என மருத்துவ வல்லுநர்களால் கண்டறிய முடியவில்லை என கூறியுள்ளார்.குழந்தைகள் பிறந்ததை இவர் மறைக்க விரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நீதிபதியின் இந்த தீர்ப்பு திங்கள்கிழமை வினிபெக் நீதிமன்றத்தில் இருந்து ஊடகங்கள் மூலம் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது.
பாதுகாப்பு பெட்டகத்திற்கு வாடகை கட்டத்தவறியதால் Giesbrecht 2014அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.
இவரது பெட்டகத்திற்குள் இருந்த பொருட்களை ஏலத்தில் விடுவதற்காக பிளாஸ்டிக் பெட்டிகளை திறந்த சமயம் விநோதமான மணம் வந்ததை ஊழியர்கள் தெரிந்து கொண்டனர்.
பொலிசார் வரவழைக்கப்பட்டனர். குப்பை பைகளில் எச்சங்கள் வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
ஒரு உடல் வாளி ஒன்றிற்குள் போட்டு கான்கிரீட்டிற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொன்று வெள்ளை நிற பவுடரால் மூடப்பட்டிருந்ததால் உலர்ந்து உடல் கடினமாகிய நிலையில் இருந்துள்ளது.
மூன்றாவது குழந்தையின் எலும்பு குவியல் ரவல் ஒன்றினால் சுற்றப்பட்டிருந்துள்ளது.
Giesbrecht டிஎன்ஏ மாதிரியை வழங்க கட்டாய படுத்த பொலிசாரால் முடியவில்லையாதலால் அவர்கள் தேடல் ஆணை ஒன்றுடன் துடைக்கும் துணி ஒன்றை அவரது படுக்கை அறையில் இருந்து எடுத்துள்ளனர்.
சோதனையில் ஆறு குழந்தைகளின்ஐந்த ஆண்கள் மற்றும் ஒரு பெண்–தாய் இவரென தெரியவந்தது. சாட்சியங்களின் தகவல் பிரகாரம் கர்ப்பம் தரித்திருந்தமை குறித்து இவர் எவரிடமும் தெரியப்படுத்தவில்லை என அறியப்படுகின்றது.
இவரது இரண்டு குழந்தைகள் வைத்தியசாலையில்.அத்துடன் சட்டப்படி 10 கருச்சிதைவு செய்துள்ளார்.
எச்சங்களுடன் காணப்பட்ட துவாலைகள், போர்வைகள் மற்றும் ஏனைய பொருட்கள் குழந்தைகள் வீட்டில் பிறந்து பின்னர் பாதுகாப்பு பெட்டகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரனையின் போது எதிர்தரப்பு சாட்சியங்கள் எதனையும் அழைக்கவில்லை என கூறப்பட்டது.
தனது கட்சிகாரர் பாதுகாப்பு பெட்டகத்தில் அவர்களை காப்பாற்ற வைத்திருந்தாரே அன்றி அப்புறப்படுத்துவதற்கில்லை எதிர்தரப்பு வக்கீல் வாதாடியுள்ளார்.
நீதிபதி அதனை நம்பவில்லை.
தனது கன்னி பெயருடனும் தவறான ஒரு விலாசத்துடனும் பெட்டகத்தை வாடகைக்கு எடுத்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.