பாக். விமானத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி? அதிரடியாக நடவடிக்கை எடுத்த பிரித்தானிய அதிகாரிகள்
பாகிஸ்தானில் இருந்து பிரித்தானியா வந்துள்ள விமானத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவரை பிரித்தானிய அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Heathrow விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த பாகிஸ்தான் சர்வதேச விமானத்தில் சந்தேக நபர் ஒருவர் பயணம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து குறித்த விமானத்தை Stansted விமான நிலையம் நோக்கி திருப்பி விட்டுள்ளனர்.
பாகிஸ்தான் விமானத்தில் சந்தேக நபர் பயணம் மேற்கொள்வது குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து பிரித்தானியாவின் RAF Typhoon ராணுவ விமானங்கள் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் Scotland Yard இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், குறித்த சந்தேக நபர் Metropolitan பொலிசாரால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் என உறுதியான தகவலை பகிர்ந்துள்ளது.
இருப்பினும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதையும் Scotland Yard பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிகாரிகள், குறித்த நபர் தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகளுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.