பிரித்தானியாவில் தீவிரவாத கடற்படை வீரர்
31 வயது நிரம்பிய சியாரன் மெக்ஸ்வெல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் தென்கிழக்கு பகுதியான சொமர்செட்டில் பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மெக்ஸ்வெல் மீது, பதவியை சாதகமாக பயன்படுத்தி பயங்கரவாத செயல்களுக்கு துனை நின்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன், அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனவும் வெடிபொருட்களை கொள்வனவு செய்தார் எனவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று முன்தினம் ஓல்ட் பெய்லி நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட போது, மாக்ஸ்வெல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிபொருட்களின் கொள்வனவு மற்றும் ஆயுதங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சமி வில்சன், வட அயர்லாந்தில் இருந்த ஆயுததாரிகளுக்கு உதவும் வகையில் அவர் செயற்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எதுவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை மெக்ஸ்வெல்லின் தண்டனை காலம் அறிவிக்கப்படும் தினம் குறித்து எதுவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.