ஒன்ராரியோ மாகாணம் திறந்தே உள்ளது – குடிவரவு அமைச்சர் லாரா அல்பனீஸ்.

ஒன்ராரியோ மாகாணம் திறந்தே உள்ளது – குடிவரவு அமைச்சர் லாரா அல்பனீஸ்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் பயணத் தடை மற்றும் அகதி ஏற்புத்தடையை அடுத்து ஒன்ராரியோ மாகாண குடிவரவு அமைச்சர் லாரா அல்பனீஸ் அவர்கள் , தமது மாகாணம் முஸ்லிம் மதத்தவர் உட்பட எம்மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்புள்ள ஒரு புகலிடமாக உள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் கனேடியக் குடிவரவு அமைச்சருடன் தான் தொடர்பு கொண்டதாகவும், ஒன்ராரியோ மாகாணம் இன, மத, வேறுபாடுகள் இன்றி சகல நாடுகளிலும் இருந்து அகதிகளை ஏற்றுக்கொள்ள ஆயத்தமான நிலையில் உள்ளது என்பதை தான் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஒன்ராரியோ மாகாணம் தனது பல்கலாச்சாரத்தன்மை, மற்றும் திறந்த மனதுடைய கொள்கைகளால் பலம்வாய்ந்த பொருளாதார நிலையில் உள்ளது எனவும் டிசம்பர் 2015 முதல் அண்ணளவாக 20,000 அகதிகள் (இவற்றில் 16,000 சிரிய அகதிகள்) ஒன்ராரியோவில் குடியேறி உள்ளனர் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *