முக்கியமான விடயத்துக்காக கனடாவில் களம் இரு தமிழ் யுவதிகள்…

முக்கியமான விடயத்துக்காக கனடாவில் களம் இரு தமிழ் யுவதிகள்…

கனேடியத் தமிழர்கள் மத்தியில் இடம்பெறும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவும், அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட மற்றும் உளவியல் ஆலோசனைகளையும் பெற்றுத் தரும் நோக்கிலும் ‘அன்பு’ (ANBU – Abuse Never Becomes Us) என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

கனடாவில் வசித்து வரும் இலங்கையரான தர்ஷிகா இளங்கீரன் மற்றும் அவரது நண்பி ஜென்னி ஸ்டார்க் ஆகியோர் இணைந்தே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

“சிறுவர் துஷ்பிரயோகம் என்பது உலகெங்கும் இடம்பெறவே செய்கிறது. எனினும், தமிழ்ச் சமூகத்தில் இந்தப் பிரச்சினை ஒரு குடும்பப் பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அதுபற்றி வெளியே முறையிட்டாலோ, தெரிவித்தாலோ குடும்ப கௌரவம் பாதிக்கப்பட்டு விடும் என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.

“மேலும், இதை வெளியே சொல்வதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்/சிறுமியின் எதிர்காலம் பாழாகிவிடும் என்றும் பயப்படுகிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தைத் தகர்த்து, தமிழ்ச் சமூகத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகத்தை வெளிக்கொணர்வதன் மூலம், எதிர்காலத்தில் இது போன்ற குற்றச் செயல்களைக் குறைக்கும் எண்ணத்துடனேயே நாம் இந்த இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம்” என்று கூறுகிறார் தர்ஷிகா.

“பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்பது பற்றி குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லத் தெரிந்த பெற்றோர் மிகச் சிலரே இருக்கிறார்கள். குறைந்தபட்சம் உடல் உறுப்புகளின் பெயர்களையோ, எந்தெந்த உறுப்புக்கள் துஷ்பிரயோகிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியோ குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதன் மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்” என்கிறார் ஜென்னி!

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *