ராட்டினத்தில் இருந்து தூக்கி விசப்பட்ட இளம்பெண்..உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்: அதிர்ச்சி வீடியோ
சீனாவின் பிரபல பொழுது போக்கு பூங்கா ஒன்றில் இளம்பெண் ஒருவர் அங்கிருந்த ராட்டினத்தில் சவாரி செய்த போது தூக்கி விசப்பட்டு, இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சீனாவின் Chongqing நகரத்தில் Zhaohua Amusement என்ற பிரபல பொழுது போக்கு பூங்கா ஒன்று உள்ளது. சுமார் 29 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
அதிலும் இங்கு Flying Moon Car மற்றும் ‘Flying Space Car மிகவும் பிரபலம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 14 வயது இளம்பெண் மற்றும் சிலர் Space Adventure என்று கூறப்படும் ராட்டினத்தில் ஏறி உள்ளனர். இதனையடுத்து அனைவருக்கும் பாதுகாப்பு வளையம் மாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைவருக்கும் பாதுகாப்பு வளையம் மாட்டப்பட்டுள்ளது. ராட்டினம் சுற்றத்தொடங்கிய சில நிமிடங்களில் அப்பெண் தூக்கி வீச்சப்பட்டாள். ஆனால் அவரது கால் பாதுகாப்பு வளையத்தில் சிக்கியிருந்ததால் அந்த ராட்டினத்தில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பிகளில் அவரது தலை பலமாக மோதியது. இதனால் அவர் வலியால் அலறியுள்ளார்.
தலை பலமாக மோதியதால் நிலைகுலைந்த அவர் அதன் பின் தூக்கி விசப்பட்டார். இச்சம்பவத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மக்கள், ராட்டினத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு இட்டுச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் அப்பெண் யாருடன் வந்தார் என்பது குறித்து இன்னும் சரிவரத் தெரியவில்லை எனவும் இந்த விபத்து தொடர்பாக பொலிசார் அந்த பூங்கா நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.