டிரம்பின் பயண தடைக்கு ரொறொன்ரோ யு.எஸ்.தூதரகம் இலக்கு.
ரொறொன்ரோ யு.எஸ்.தூதரகம் பொது மக்கள் சேவைகளிற்கு இன்று மூடப்பட்டுள்ளது. யுனிவேசிட்டி அவெனியுவில் அமைந்துள்ள காரியாலய கட்டிடத்தின் வெளியே இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று திங்கள்கிழமை காலை 8மணியளவில் ஆரம்பமானது. 7முஸ்லிம்- பெரும்பான்மை நாடுகளிற்கு ஒரு அமெரிக்க பயண தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெறும் என காரியாலயம் ஞாயிற்றுகிழமை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஜனவரி 30.2017.ல் ரொறொன்ரோ யு.எஸ்.காரியாலயத்தின் அருகே ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டமிடபட்டுள்ளது. தூதரகம் தற்காலிகமாக பொதுமக்களிற்கு மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே வழங்கும் என அறிக்கை தெரிவிக்கின்றது.
விசாவோ அல்லது அமெரிக்க குடியுரிமை சேவைகளோ இடம்பெற மாட்டாது. முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த நியமனங்கள் வேறொரு தினத்திற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காலை 6 மணிக்கு முன்னர் ரொறொன்ரோ பொலிசார் 360யுனிவெசிட்டி அவெனியுவில் அமைந்துள்ள தூதரகத்தை சுற்றியுள்ள வீதிகளை மூடிவிட்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமயம் மொழி அவர்களின் தோல் நிறம் காரணமாக அகதிகள்- ஏராளமான பிள்ளைகள்- விமான நிலையங்களிற்குள் அகப்பட்டு கொண்ட தாகவும் ஆபத்தான வீட்டிற்கு திருப்பட்டதாக இந்நிகழ்வை குறிக்கும் பதிவு ஒன்று முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை டொனால்ட் டிரம்ப் ஏழு முஸ்லீம் நாடுகளின் குடிவரவாளர்களிற்கான பயண தடையை கைச்சாத்திட்டதை தொடர்ந்து இந்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று பிற்பகல் ஒட்டாவாவிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று நிகழ உள்ளது.