பிரதமரின் சதித் திட்டம்? மீண்டும் ஆரம்பமானது சுதந்திரப் போராட்டம்..!!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதே ரணில் விக்ரமசிங்கவின் சதித்திட்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
ஆட்சிக் கவிழ்ப்புக்கான முதற்படி எனக் கூறப்படும் கூட்டு எதிர்க்கட்சியின் புரட்சியின் ஓர் ஆரம்பம் கூட்டம் நுகேகொடையில் இன்று இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்ச தேடிவைத்த அனைத்தையும் விற்று விட்டு அதன் மூலம் தனக்கு இலாபத்தை தேடிக் கொண்டு வருகின்றார்.
அதனால் அவர் எதிர்ப்பார்ப்பது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று கொள்வதே. அதற்கான சதித்திட்டத்தையே ரணில் தீட்டிக் கொண்டு வருகின்றார்.
மகிந்த எனும் புயல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவது உறுதி அதற்கான மக்கள் சூறாவளி இன்று புரட்சியாக எழுந்துள்ளது.
இரண்டாவது சுதந்திரப்போராட்டத்தை மகிந்த ஆரம்பித்து வெற்றி பெற்றதைப் போல் தற்போது கேடு கெட்ட ஆட்சியை கவிழ்க்க சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்.
அதற்கான விடை இப்போது கண்முன்னே தெரிகின்றது. நாட்டை காட்டிக் கொடுத்து ஆட்சி செய்யும் ரணிலின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
தாய் நாடு இப்போது காப்பாற்றுமாறு அழுகின்றது. இந்த நாட்டை காப்பாற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கின்றார்.
அவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். ரணிலின் முறையற்ற ஆட்சியை மீட்டு எடுத்து மகிந்தவிடம் ஒப்படைக்க நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம் எனவும் கம்மன்பில தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதியும், பிரதமரும் பலா இலை மற்றும் க்ரோட்டன் இலையை உட்கொண்டு பொது மக்களுக்கு எடுத்துக்காட்டாக, இருக்க வேண்டும் என பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
உணவு பற்றாக்குறை ஏற்படுமாயின், பலா இலை மற்றும் க்ரோட்டன் இலையை உண்ணுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்ளும் என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை அரசாங்கம் ஏற்படுத்துமாயின், ஜனாதிபதியும், பிரதமரும் பலா இலை மற்றும் க்ரோட்டன் இலையை உண்ணும் நேரடி தொலைக்காட்சி பதிவு ஒன்றை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கடனை பெற்று தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது என்றும் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை குறித்த கூட்டத்திற்கு 10 இலட்சம் மக்கள் வருகை தந்துள்ளதாக கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேடையில் தெரிவித்தமை குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.