சாவடி அவனை சாவடி என்று எட்டி உதைத்த பெண் போலீஸ்: கலவர பூமியின் பரபரப்பு நிமிடங்கள்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் சமீபத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதன் பயனாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தினர்.
அதன் பின்னர் இது வன்முறையாக மாறியது. இதனால் சென்னையே ஒரு கலவர பூமி போல் காட்சி அளித்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நடுக்குப்பத்து வீடுகளில் தஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறி பொலிசார் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் அடித்து தாக்கியுள்ளனர்.
இதனால் சென்னையின் திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தில் கலவரம் வெடித்தது. இதனால் நடுக்குப்பம் பகுதியின் வீட்டிற்கு ஒரு ஆண்கள் காவல் நிலையத்திற்கு வரவேண்டும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அச்சமடைந்து வீட்டிற்கே வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொலிசார் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியின் ஒரு வீட்டில் இருந்த பிரேம் என்ற நபரை 15 பேர் கொண்ட பொலிசார் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.
அவருடன் நிஷாந்த் என்ற இளைஞரும் இருந்துள்ளார். அவரையும் பொலிசார் விட்டுவைக்கவில்லை. இரண்டு பேரையும் குண்டுக்கட்டாக எங்கேயோ ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று அங்கு வைத்து காக்கிச் சட்டை போட்ட எல்லோரும் அடித்து உதைத்தார்கள் என்றும் அதில் ஒரு பெண் பொலிசார் இவர்களை சாவடி அவனை சாவடி என்று எட்டி எட்டி உதைத்ததாகவும் பிரேம் தெரிவித்துள்ளார்.