ஜெயிலில் இருந்து தப்பியோடிய பாலியல் குற்றவாளி. தேடும் பொலிசார்!
கனடா- ஞாயிறன்று கிங்ஸ்ரன் மத்திய சிறையில் இருந்து தப்பி விட்ட கைதியை தேடும் முயற்சியில் கிங்ஸ்ரன் பொலிசார் மற்றும் ஒன்ராறியோ மாகாண பொலிசார் தேடிவருகின்றனர்.
டேவிட் மார்செல் என்ற இக்கைதி கடத்தல், பாலியல் பலாத்காரம், ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் உடைத்து உள்ளே செல்லுதல் போன்ற குற்றங்களிற்காக 1453 பார்த் வீதி கிங்ஸ்ரனில் அமைந்துள்ள Henry Trail Correctional Facilityயிலிருந்து தப்பி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் படத்தை வெளியிட்ட பொலிசார் இவரை காண்பவர்கள் 911உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.