அடுத்த இரண்டு நாட்கள் பிரித்தானியாவில் அச்சுறுத்தும் குழப்பங்கள் ஏற்படலாம்: திடீர் எச்சரிக்கையால் பரபரப்பு
பிரித்தானியாவில் கடுமையான உறை பனி மூட்டம் காரணமாக அடுத்த இரண்டு நாட்கள் வாகன சாரதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் மத்திய பகுதி மற்றும் தென் பகுதிகளில் காலை வேளையில் கடுமையான மற்றும் அச்சுறுத்தும் பனி மூட்டம் சூழ வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.
தென் பகுதியில் சூழ வாய்ப்பிருக்கும் இந்த பனி மூட்டத்தினால் திங்கள் மற்றும் அதை தொடர்ந்துள்ள நாட்களில் இதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி வரும் நாட்களில் கால நிலை -6C வரை செல்ல வாய்ப்பிருப்பதாகவும் இது பிரித்தானியாவின் மத்திய பகுதி மற்றும் தென் பகுதிகளில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடுமையான மூடு பனி காரணமாக சாலை போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறும் வானிலை ஆய்வாளர்கள், இதனால் விமான சேவை பாதிப்புக்குள்ளாகும் நிலையும் ஏற்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்தின் குறித்த திடீர் எச்சரிக்கையால் பிரித்தானிய மக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.