அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார்.
தனது ஆரம்ப உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20 ஆம் திகதி, மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூறப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று கூறிய ட்ரம்ப் , ஆனால் இந்த வேலையை செய்து முடிக்கப்போவதாகவும் உறுதியளித்தார். இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் இலாபம் அளிக்கும் வகையிலேயே எடுக்கப்படும் என்றார் டிரம்ப் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
.