‘ஆன்மீக ஊழல்’ மோசடி!
கனடா-பிரம்ரனை சேர்ந்த மனிதன் ஒருவர் ‘ஆன்மீக ஊழல்’ பெயரில் பெண் ஓருவரை ஏமாற்றி நகைகள் பணம் உட்பட 61,000டொலர்களை பறித்துள்ளதாக பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
2016 யூலை மாதம் இப்பெண் குறிப்பிட்ட மனிதருடன் கதைத்துள்ளார். அப்போது தான் கடவுளிற்கு அருகில் இருப்பதாகவும் அதனால் லாட்டரியில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு பெரிய தொகை பணத்தை வாங்கிய நபர் அப்பணத்தை நிலத்தில் போட்டு எரித்து கெட்ட ஆவியை எரிக்க போவதாகவும் பின்னர் அப்பணத்தை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய பெண் நகைகளையும் பணத்தையும் கொடுத்துள்ளார். ஏமாற்றியவர் எதனையும் திரும்ப கொடுக்காததால் பெண் பொலிசாருடன் தொடர்பு கொண்டார்.
40-வயதுடைய பிரம்ரனை சேர்ந்த டர்ஷன் டலிவால் என்பவர் மீது மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நபரால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

