திமுகவாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவரை எதிர்ப்பேன்! கருணாநிதி பேரன் நடிகர் அருள்நிதி அதிரடி
ஜல்லிக்கட்டு போராட்டம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாடு முழுக்க பெரும் இளைஞர்கள் படை ஒன்று சேர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளது.
நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் திரைத்துறையை சேர்ந்த பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிலர் நேரில் சென்று களத்திலேயே இறங்கிவிட்டனர். பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக போராட்டக்காரர்களுக்கு பக்கபலமாக ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ட்விட்டரில் கருத்து சொன்ன நடிகர் அருள்நிதி சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுப்பவர்களை ஆதரிப்போம். எதிர்ப்பவர்களை எதிர்ப்போம்.
நான் அரசியல்வாதியின் பேரன் என்று வரவில்லை. ஒரு சக தமிழனாக வந்துள்ளேன் என கூறினார். எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என கூறினார்.
இவர் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.