ராணுவமே வந்தாலும் மேல கைவெச்சு பாருடா – சிம்பு ஆவேசத்துடன் தந்த புது ஐடியா
நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெருமளவு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று தன்னுடைய வீட்டின் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தார்.
தற்போது மெரினா கடற்கரையில் ராணுவம் குவிந்ததாக தகவல் கிடைத்ததையொட்டி சிம்பு ஒரு விஷயத்தை பகிர்ந்தார். “அதாவது மெரினாவில் ராணுவம் குவிந்ததாக சொல்கிறார்கள். எனது நண்பர்கள் உடனே யோசித்து அங்கு இருக்கும் அனைவருக்கும் இந்திய தேசிய கொடியை அனுப்பிவைத்துள்ளனர்.
இனிமேல் என் மக்கள் மேல் கைவைத்து பாருங்க டா, ராணுவமே வரட்டும் தேசிய கொடி மேல் இருந்தால் நீ அடிக்க முடியுமா, நீங்க அடிச்சு பாருங்க டா, அப்படி சில பேருக்கு தேசிய கோடி கிடைக்கலான உடனே சேர்த்து விடுங்கள். இந்த விஷயத்தை உடனே whatsappல் அனுப்புங்க என்று கூறியுள்ளார்.