ரொறொன்ரோ பெரும்பாகத்தில் உறைபனி மழை.
இன்று காலை ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும் வானிலை- தொடர்பான தாமதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் காலை ஆரம்பமாகிய உறை பனி மழையே இந்நிலைக்கு காரணமாகும்.
வானிலை காரணமாக வாகன மோதல்கள், மின்சார செயலிழப்புக்கள் போன்றன பரவலாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரம்ரன் பகுதியில் Steeles Avenue மற்றும் வின்சன்ட் சேர்ச்ஹில் புளுவாட் பகுதிகளில் மின்சார செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் தீவிரமான பனி நிறைந்த நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறைபனி காரணமாக பாடசாலை பேருந்து சேவைகள் பல பகுதிகளில் ரத்து செய்யப்பட்டன.
GO போக்குவரத்தின் பல பாதைகள் தாமதத்திற்குள்ளாகியது.
ரொறொன்ரோ ஹமில்ரன் மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகம் உறைபனி மழை எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பரபரப்பான காலை நேரத்தில் அபாயகரமான போக்குவரத்து நிலைமை காணப்படுமென கனடா சுற்று சூழல் எச்சரித்துள்ளது.
வீதிகள்-நெடுஞ்சாலைகள் வழுக்கல் நிறைந்த தன்மை கொண்டுள்ளதாக பொலிசார் எச்சரிக்கின்றனர்.
எட்டு சதவிகிதமான புறபடவிருந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரொறொன்ரோ விமான நிலையங்கள் ஆணையம் தெரிவிக்கின்றது.
வாகன சாரதிகள் மற்றம் பாதசாரிகளை பொலிசார் எச்சரிக்கின்றனர்.வழுக்கலான நடைபாதை காரணமாக பாதசாரிகள் பலர் இன்று காலை விபத்திற்காளாகி உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
1,638 total views, 549 views today
– See more at: http://www.canadamirror.com/canada/78676.html#sthash.XfBiJN6e.dpuf