கனடாவில் நாடுகடத்தப்பட உள்ள ஈழத்தமிழர்
கனடாவில் இருந்து ஈழத்தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக்கவாசகம் சுரேஸ் என்ற இளைஞரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவருக்கு எதிரான ஆதாரங்களை கனடாவின் குடிவரவு சபை முன்வைத்துள்ளது.
இவர் தன்னார்வமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பில் ஈடுபட்டிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடரப்பட்டு இவரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து கடந்த 2 தசாப்தங்களாக அவர் நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக வழக்காடி வந்தார்.
எனினும் தற்போது இவரை நாடு கடத்தும் தீர்ப்பை கனடாவின் நீதிமன்றம் நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.