Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜல்லிக்கட்டு பற்றி ராகவா லாரன்ஸ் அதிரடி அறிக்கை

January 18, 2017
in News
0
ஜல்லிக்கட்டு பற்றி ராகவா லாரன்ஸ் அதிரடி அறிக்கை

ஜல்லிக்கட்டு பற்றி ராகவா லாரன்ஸ் அதிரடி அறிக்கை

தற்போது தீயாய் பரவி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி நடிகர் லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

“Hi friends and fans! மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. அனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும், வீரத்துக்கும் உரியதானது.”

“சுமார் 5000ம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் வீர விளையாட்டாக கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு தடையா ? ஆச்சர்யம் தான். ஆண்டு முழுவதும் தங்களது செல்ல குழந்தைகளாக கருதப்படும் காளைகளை ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாள் தான் விளையாட வைக்கிறார்கள்.”

“ஆனால் நாள் முழுவதும் எத்தனை லட்சம் உயிர்கள் நம் உணவுக்காகவும், உடைகளுக்காகவும், தோலுக்காகவும் கொல்லப்படுகிறது.”

“ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாட்கள் பயன்படுத்தப் படும் காளைகள் வதை செய்யப் படுகிறது என்றால்.. உணவுக்காகவும், தோலுக்காகவும், உடைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் என்ன தாங்களாகவே தங்கள் தலையை நீட்டி கொல்லப் படுவதை வரவேற்கின்றனவா?.”

“வீர விளையாட்டுக்கு மிருக வதை என்று பெயராம். வியாபாரத்திற்கு அன்னிய செலாவனி என்று பெயராம். கடந்த சில நாட்களாக சகோதரர், சகோதரிகள் ரோட்டில் நின்று போராடுகிறார்கள் எதற்காக?.”

“நமக்கு பிடித்த விளையாட்டை விளையாட விடுங்கள் என்று.. அதற்காக அடித்து உதைத்து துன்புறுத்துவதா? மாடுகளை துன்புறுத்துகிறோம் என்று தடை செய்து விட்டு மனிதர்களை அடித்து துரத்தி துன்புறுத்துவது என்ன நியாயம்?.”

“தமிழன் போராடுவது எதற்காக ? தாங்கள் வீரன் என சொல்லப் படுவதற்காக ….ஜல்லிக்கட்டு வேண்டி போராடுபவர்களை முடக்கி கோழைகளாக்க வேண்டாம்.”

“தயவு செய்து மாநில அரசும், மதிய அரசும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும்,” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

ஜல்லிக்கட்டு குறித்து விஜய் கருத்து

Next Post

பூதாகரமாக வெடித்த ஜல்லிக்கட்டு பிரச்னை… வெட்ட வெளிச்சமாகிய விஷாலின் உண்மை முகம்!..

Next Post

பூதாகரமாக வெடித்த ஜல்லிக்கட்டு பிரச்னை... வெட்ட வெளிச்சமாகிய விஷாலின் உண்மை முகம்!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures