ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வலுத்துவருகிறது. பலரும் ஆர்பாட்டங்களையும், தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
தற்போது ஜல்லிக்கட்டு குறித்து விஜய் பேட்டியளித்துள்ளார். அவர் சொல்லும்போது மக்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கவே சட்டம். புதைப்பதற்கு அல்ல.
எந்த பாகுபாடில்லாமல் தமிழன் என்று ஒரே அடையாளத்தோடு போராட்டத்தில் இறங்கிய எல்லோரையும் தலை வணங்குகிறேன்.
உரிமை போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை வெளியே அனுப்பிட்டா நான் சந்தோஷப்படுவேன். பிரச்சனைக்கு காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்பிட்டா தமிழ் நாடு சந்தோசப்படும் என அவர் கூறியுள்ளார்.