போதையில் வாகனம் செலுத்து பவர்களிற்கான கடுமையான தண்டனை குறித்த கேள்விகள்!
கனடா-போதையில் வாகனம் செலுத்தி உயிர்க்கொலை செய்யும் சாரதிகளிற்கெதிரான கடுமையான தண்டனை குறித்த சமீபத்திய நோக்கம் சம்பந்தமாக கேள்விகள் எழுந்துள்ளன. இவ்வாறான கடுமையான தண்டனைகள் மூலம் பிரச்சனைக்கு விடைகாண முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அறியப்படுகின்றது.
போதையில் வாகனம் செலுத்தி மரணத்திற்கு காரணமான சாரதிகள் எதிர் நோக்கிய தண்டனைகள் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட உயர்ரக தீர்மானங்களின் முன்னுதாரணங்களாக அமைந்துள்ளதாக ஒன்ராறியோ நீதிபதி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது.
நீதிபதி கெரி பொஸ்வெல் பல உதாரணங்களை-மூன்று சிறுவர்களையும் அவர்களது பேரனையும் போதையில் கொன்று குற்றத்தை ஒப்பு கொண்ட மார்ககோ முசோ என்பவருக்கு 10வருட சிறைத்தண்டனை விதித்தது உட்பட்ட- குறிப்பிட்டுள்ளார்.
34வயதுடைய மார்செலோ பிரகசி என்பவர் அலிஸ்ரன் ஒன்ராறியோவை சேர்ந்த நகர தொழிலாளி ஒருவரை போதையில் வாகனம் செலுத்தி கொடூரமான முறையில் கொன்ற குற்றத்திற்காக ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.