ஈழ தமிழன் தயாரித்த திரைப்படத்தில் நடித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈழ தமிழ் தயாரிப்பாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றில் கேமியோ பாத்திரத்தில் நடித்து உள்ளார்.
திரைப்படத்தின் பெயர் Ghosts Can’t Do. 1989 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இலங்கையின் திரைப்பட ஜாம்பவான்களில் ஒருவரான சந்திரன் இரட்ணம் இதன் கூட்டு தயாரிப்பாளர்களில் ஒருவர்.
சில காட்சிகள் காலியிலும் படமாக்கப்பட்டன. ட்ரம்ப் கோபுரத்தில் உள்ள போர்ட் ரூமில் ஒரே நாளில் எடுக்கப்பட்ட காட்சியிலேயே ட்ரம்ப் நடித்தார்.
பிரபல நட்சத்திரங்கள் நடித்து இருந்தபோதும் இது ஒரு தோல்வி படமாக அமைந்ததுடன் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.
ஆயினும் மோசமான துணை நடிகர் விருது இப்படத்துக்காக டொனால்ட் ரம்ப்புக்கு அறிவிக்கப்பட்டது.
டொனால்ட் ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோதும், பின் வெற்றியீட்டி ஜனாதிபதியான போதும் இவருக்கு சந்திரன் இரட்ணம் வாழ்த்து செய்திகள் அனுப்பி இருந்தார்.
அத்துடன் இலங்கைக்கு வர வேண்டும் என்று அழைப்பும் விடுத்து உள்ளார்.