மறைக்கப்பட்டிருந்த போதை பொருள் ஆய்வகம்! குடும்பத்தவர் கைது.

மறைக்கப்பட்டிருந்த போதை பொருள் ஆய்வகம்! குடும்பத்தவர் கைது.

கனடா-மார்க்கம் பகுதியில் கணவன் மனைவி மற்றும் இரண்டு வாலிப மகன்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.வீட்டிற்குள் போதை பொருள் ஆய்வகம் ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருட்டு சம்பவம் தொடர்பாக ஒரு தேடுதல் ஆணையை நிறைவேற்ற மார்க்கம், ஒன்ராறியோவில் அமைந்துள்ள வீடொன்றிற்கு சென்ற போது இந்த ஆய்வகம் கண்டுபிடிக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர். இது ஒரு இரகசிய மருந்து ஆய்வகம் என பொலிசார் நம்புகின்றனர்.
குறிப்பிட்ட வீடு ஆய்வகம் ஒன்றாக பயன் படுத்தப்பட்டிருக்கலாம் என விசாரனையாளர்கள் உறுதிப்படுத்தினர். பாதுகாப்பு கருதி வீதி மூடப்பட்டு விட்டது.
48வயது மனிதன், 44வயதுடைய பெண் மற்றும் 16 மற்றும் 14வயதுடைய பையன்கள் இருவர் மீது கட்டுப்படுத்தப்பட்ட பொருளை உற்பத்தி செய்தமை மற்றும் கடத்தல் நோக்கம் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டது.
இரகசிய போதை மருந்து ஆய்வகங்கள் தீவிர அபாயங்களை ஏற்படுத்த கூடியவை எனவும் அபாயகரமான இரசாயனப்பொருட்கள் உபயோகிக்கப் படுவதால் தீ மற்றும் வெடிப்புக்கள் போன்ற விளைவுகள் கூட ஏற்படலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

drugdrug1

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *