Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெர்லின் பாணியில் உக்ரைனில் லொறி தாக்குதல்: தாய், குழந்தையின் தலை துண்டித்த கொடூரன்

December 31, 2016
in News
0
பெர்லின் பாணியில் உக்ரைனில் லொறி தாக்குதல்: தாய், குழந்தையின் தலை துண்டித்த கொடூரன்

பெர்லின் பாணியில் உக்ரைனில் லொறி தாக்குதல்: தாய், குழந்தையின் தலை துண்டித்த கொடூரன்

உக்ரைனில் மர்ம நபர் ஒருவர் தாய் மற்றும் குழந்தையின் தலையை துண்டித்து விட்டு, பெர்லின் பாணியில் லொறியை மோதி தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர் ஒருவன் 42 வயது பெண் மற்றும் அவரது 2 வயது குழந்தையை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.

பின்னர், ஒரு பெரிய லொறியில் சம்பவயிடத்தை விட்டு தப்பி சென்ற அவன், உக்ரைன் சாலையில் சுமார் 100 கி.மீ வேகத்தில் லொறியை இயக்கியுள்ளான்.

அவன் பயணிக்கும் பாதையில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சாலைகளை பொலிசார் மூடியுள்ளனர். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவனை திசை திருப்பியுள்ளனர்.

அந்த மர்ம நபர் பெர்லின் தாக்குதல் பாணியில் மக்கள் கூட்டத்தில் லொறியை மோத முயற்சித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிசார் லொறியை பிடிக்க மர்ம நபர் தப்பி ஓடியுள்ளான். தப்பிச் சென்ற மர்ம நபரை பொலிசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், உள்ளுர் வாசிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலை துண்டிக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட பெண் Odessa நகரத்தின் மூத்த வருமான வரித்துறை அதிகாரியின் சகோதரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், கொலை மற்றும் லொறி தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெரியவில்லை.

Tags: Featured
Previous Post

லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக? திகிலுட்டும் காட்சி

Next Post

தீக்கிரையான பிரபல சுவிஸ் ஹோட்டல்: 150 விருந்தினர் வெளியேற்றம்: மீட்பு பணியில் 100 பேர்

Next Post
தீக்கிரையான பிரபல சுவிஸ் ஹோட்டல்: 150 விருந்தினர் வெளியேற்றம்: மீட்பு பணியில் 100 பேர்

தீக்கிரையான பிரபல சுவிஸ் ஹோட்டல்: 150 விருந்தினர் வெளியேற்றம்: மீட்பு பணியில் 100 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures