முன்னாள் ரொறொன்ரோ மேயரின் விதவை பொலிஸ் காவலில்!
ரொறொன்ரோ–முன்னாள் ரொறொன்ரோ மேயர் றொப் வோர்ட்டின்மனைவி றினெட்டா வோர்ட் போதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்ற சாட்டின் பெயரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.
புதன்கிழமை இரவு இச்சம்பவம் நடந்ததாக ரொறொன்ரோ பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரவு 6மணியளவில் கிங்ஸ்வே பகுதியில் வாகனம் செலுத்தி கொண்டிருக்கையில் கைதாகியுள்ளார். இவர் மட்டும் தனியாக வாகனம் செலுத்தியுள்ளார்.
பொலிசாரின் தகவல் பிரகாரம் இவரது இரத்தத்தில் மதுபானம் இருந்நது கண்டு பிடிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு கைதான இவர் வியாழக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார்.
இரத்தத்தில் 80சதவிகிதம் அல்ககோல் காணப்பட்ட நிலையில் வாகனம் செலுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டை எதிர் நோக்குகின்றார்.
ஜனவரி மாதம் 11-ந்திகதி 2201 விஞ்ச் அவெனியு மேற்கில் அமைந்துள்ள நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.