2016 கனடாவின் தடகள வீராங்கனையாக 16வயது Penny Oleksiak .
ரொறொன்ரோ-Lou Marsh ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை வென்ற நீச்சல் வீராங்கனை Penny Oleksiak கனடாவின் இந்த வருடத்தின் தடகள வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரொறொன்ரோ ஸ்ரார் விருது கனடா முழுவதிலும் இருந்து வருடந்தோறும் விளையாட்டு பத்திரிகையாளர்கள் குழு ஒன்றினால் தெரிவு செய்யப்படுகின்றது.
கடந்த கோடை கால றியோ ஒலிம்பிக்கில் Oleksiak நான்கு பதக்கங்களை வென்றார்.100-மீற்றர் இலவச-பாணியில் தங்கப்பதக்கத்தையும் வென்றார். இந்த மாதம் வின்சர் ஒன்ராறியோவில் இடம்பெற்ற {25-மீற்றர் தடாகத்தில் நீந்தும்} short-course உலக சம்பியன்சிப் போட்டியில் மேலும் நான்கு பதக்கங்களை பெற்றார்.
Lou Marsh Trophy முன்னாள் ரொறொன்ரோ ஸ்ரார் விளையாட்டு ஆசிரியரின் பெயரால் வழங்கப்படுகின்றது.