கேட்டாலே அதிரும் செய்தி பாத்ரூம் ஊடாக சுரங்கம் அமைத்து தப்பிய 6 கைதிகள்
அமெரிக்காவிலுள்ள சிறையொன்றில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் அறுவர், கழிவறை சுவரை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். டென்னஸி மாநிலத்தின் நியூபோர்ட் நகரத்தில் நத்தார் தினத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைக்குள் சுவர் ஒன்றுடன் இணைத்து பொருத்தப்பட்டிருந்த உலோகத்தாலான கழிவறைத்தொட்டியை அகற்றிய பின்னர் இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜோன் மர்க் ஸ்பெயர், ஸ்டீவன் லூயிஸ், ஜோன் தோமஸ் ஷெஹீ, ஹார்ஸ் வாட் அலென், எரிக் கிளிக், டேவிட் வெய்ன் பிரேஸர் ஆகியோரே இவ்வாறு கழிவறைக்கு ஊடாக தப்பிச் சென்றவர்களாவர்.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் ஜோன் மர்க் ஸ்பெயர், ஸ்டீவன் லூயிஸ், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். ஏனைய நால்வரும் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.
தப்பிச் சென்றவர்களில் ஒருவரான 54 வயதான டேவிட் வெய்ன் பிரேஸர் ஆபத்தான ஒருவர் எனவும் அவர் ஆயுத முனையில் கொள்ளையடித்த குற்றச்சாட் டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்
.