Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விடுதலைப்புலிகளை 30 நாடுகள் அழித்தமைக்கான காரணம்? யார் சொன்னது அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று?

December 26, 2016
in News
0

விடுதலைப்புலிகளை 30 நாடுகள் அழித்தமைக்கான காரணம்? யார் சொன்னது அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப­ பச்சோந்திகளாக மாறி….. “ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள்.

சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள் தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே

உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..! உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து “தவபாலன்” என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வா­று சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையும், வீடியோக்களை பதிவுசெய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பியதாலும், மக்களி­ன் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்க­ளே…!

உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..! உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை! இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

  • உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு­ சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை !

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!

முகநூல்களிலும் வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!

விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?

அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது ?

பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…?

அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள்.

ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கானதளபதி­களும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள் தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்று வரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.

* தமிழீழ வைப்பகம்.

* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.

* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.

* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.

* கிராமிய அபிவிருத்தி வங்கி.

* அனைத்துலகச் செயலகம்.

* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான­ தொடர்பாடல் சேவை மையம்)

* சுங்க வரித்துறை.

* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.

* அரசறிவியற் கல்லூரி.

* வன வளத்துறை.

* தமிழீழ நிதித்துறை.

* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.

* கலை பண்பாட்டுக்கழகம்.

* மருத்துவப் பிரிவு.

* திலீபன் சிறப்பு மருத்துவமனை.

* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.

* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.

* சுகாதாரப் பிரிவு.

* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.

* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.

* நிர்வாக சேவை.

* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.

* மீன்பிடி வளத்துறை.

* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)

* தொழில் நுட்பக் கல்லூரி.

* சூழல் நல்லாட்சி ஆணையம்.

* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.

* தமிழீழ விளையாட்டுத்துறை.

* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.

* தமிழீழ போக்குவரவுக் கழகம்.

* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).

* வளங்கள் பகுதி.

* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)

* விலங்கியல் பண்ணைகள்.

* விவசாயத் திணைக்களம்.

* தமிழ்மொழி காப்பகம்.

* தமிழீழ சட்டக்கல்லூரி.

* தமிழீழ கல்விக் கழகம்.

* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.

* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).

* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).

* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).

* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது­)

* அன்பு முதியோர் பேணலகம்.

* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)

* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)­.

* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)

* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)

* சீர்திருத்தப் பள்ளி.

* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).

* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்

* உதயதாரகை (விதவைகளுக்கானது).

* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.

* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).

* எழுகை தையல் பயிற்சி மையம்.

* மாணவர் அமைப்பு.

* பொத்தகசாலை (அறிவு அமுது).

* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.

* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).

* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).

* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.

* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).

* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).

* வெளிச்சம் (மாத சஞ்சிகை).

* நாற்று (மாத சஞ்சிகை).

* பொற்காலம் வண்ணக் கலையகம்.

* அருச்சுனா புகைப்படக் கலையகம்.

* ஒளிநிலா திரையரங்கு.

* புலிகளின் குரல் வானொலி.

* தமிழீழ வானொலி.

* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.

* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.

* தமிழீழ இசைக்குழு.

* காலணி (பாதணி உற்பத்தி மையம்)

* சேரன் உற்பத்திப் பிரிவு.

* சேரன் வாணிபம்.

* சேரன் சுவையகம்.

* சேரன் வெதுப்பகம்.

* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).

* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.

* பாண்டியன் சுவையூற்று.

* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.

* சோழன் தயாரிப்புகள்.

* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.

* தென்றல் இலத்திரனியலகம்.

* தமிழ்மதி நகை மாடம்.

* தமிழ்நிலா நகை மாடம்.

* தமிழரசி நகை மாடம்.

* அந்திவானம் பதிப்பகம்.

* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.

* இளவேனில் எரிபொருள் நிலையம்.

* இளந்தென்றல் தங்ககம்

* 1௯ தங்ககம்

* மருதம் வாணிபம்.

* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).

* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).

* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.

* மாவீரர் அரங்குகள்.

* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.

* மாவீரர் நினைவு வீதிகள்.

* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங­்கள்.

* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.

* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.

* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.

* மாவீரர் நினைவு நூலகங்கள்.

* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.

* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக்கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள். உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.

சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோ­ட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள் தான் மேற்குறிப்பிட்டமக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா ?

மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபு­றமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…

தரைப்படைகள்

* இம்ரான் பாண்டியன் படையணி.

* ஜெயந்தன் படையணி.

* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.

* கிட்டு பிரங்கிப் படையணி.

* குட்டிச்சிறி மோட்டார் படையணி.

* இராதா வான்காப்பு படையணி.

* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணின்

* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.

* சோதியா சிறப்புப் படையணி.

* மாலதி சிறப்புப் படையணி.

* அன்பரசி படையணி.

* ஈருடப் படையணி.

* குறி பார்த்துச் சுடும் படையணி.

* சிறுத்தைப் படையணி.

* எல்லைப்படை,

* துணைப்படை,

* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.

* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.

* பாதுகாவலர் பிரிவு.

* முறியடிப்புப் பிரிவு.

* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.

* ஆழ ஊடுருவும் படையணி.

* உந்துருளிப் படையணி

கடற்படைகள்.

* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.

* கடல் வேவு அணி.

* சார்லஸ் சிறப்பு அணி.

* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).

* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).

* கடற்சிறுத்தை சிறப்பு அணி.

* சங்கர் படையணி.

* வசந்தன் படையணி.

* சேரன் படையணி.

* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.

வான்படை.

* கரும்புலிகள்.

* புலனாய்வுத்துறை.

* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.

* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.

* படையப் புலனாய்வுப் பிரிவு (Mஈ)

* வேவுப் பிரிவு.

* களமுனை முறியடிப்புப் பிரிவு.

* களமுனை மருத்துவப் பிரிவு.

* கணினிப் பிரிவு.

* பொறியியல் பிரிவு.

* விசேட வரைபடப் பிரிவு.

* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.

* தமிழீழ படைத்துறைப் பள்ளி.

* ஆயுத உற்பத்திப் பிரிவு.

* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.

* மாவீரர் பணிமனை

இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை!ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்குஒப்பா­க இருந்தார்கள்.

எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.

அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல….

ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது !

இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது.

உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள்?

விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது!

விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள் ! யார் சொன்னது அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று ?….

Tags: Featured
Previous Post

முன்னாள் போராளி மர்மமானமுறையில் உயிரிழப்பு.!

Next Post

சீனாவின் காலனியாக மாற போகும் ஹம்பாந்தோட்டை

Next Post
சீனாவின் காலனியாக மாற போகும் ஹம்பாந்தோட்டை

சீனாவின் காலனியாக மாற போகும் ஹம்பாந்தோட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures