தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான மாறன் தொடரை வழிநடத்தி செல்லும் முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘வர்ண கதைகள்’ எனும் இணைய தொடரின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் இமானுவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த இணைய தொடரில் மாறன், சென்றாயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, ஆர் ஜே புவனேஸ்வரி, நித்யா குயின், ரோஹிந்த், தீபா உள்ளிட்ட பலருடன் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.
உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் இந்த இணைய தொடரை அஸ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்ய, ஜே கே தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெயச்சந்திரன் தயாரிக்கிறார்.
இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், ” கலைஞர்கள் அழிந்தாலும் கலைகள் அழிவதில்லை.
ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவிய கலைகளும், ஓவிய கலைஞர்களும் அழிவை நோக்கி பயணிக்கிறார்கள். அந்த கலையை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஒரு முயற்சி தான் இந்த வர்ண கதைகள்.
திரைத்துறையில் சாதிப்பதற்காக காத்திருக்கும் நான்கு நண்பர்கள் எதிர்பாராமல் ஒரு பிரத்யேக கதாபாத்திரத்திடம் சிக்குகிறார்கள்.
அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை கொமடி, ஹாரர், பேண்டஸி கலந்து சொல்வது தான் இந்த இணைய தொடர்” என்றார்.












