Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் அபராம்; இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

October 14, 2026
in News, Sports, முக்கிய செய்திகள்
0
நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற மூன்றவாதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்களால் மகத்தான வெற்றியை ஈட்டி ஆறுதல் அடைந்தது.

எனினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் லஹிரு உதார (1) இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழந்தார். (15 – 1 விக்.)

எனினும், சினேத் ஜயவர்தன (38), அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

தொடர்ந்து குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

குசல் மெண்டிஸ் 48 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 87 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 27 பந்துகளில் 40 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் அரபாத் மின்ஹாஸ் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மொஹமத்  இம்ரான் 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் சஹிப்ஸதா பர்ஹான் 75 ஓட்டங்களைக் குவித்தார். 

அவர் இந்தத் தொடரில் குவித்த மூன்றாவது தொடர்ச்சியான அரைச் சதம் இதுவாகும்.

அவரை விட மத்திய வரிசையில் அரபாத் மின்ஹாஸ் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

சஹிப்ஸதா பர்ஹானும் அரபாத் மின்ஹாஸும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 66 ஓட்டங்கள் பாகிஸ்தானை கௌரவமான நிலையில் இட்டது.

பந்துவீச்சில் தசுன் ஷானக்க 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நுவன் துஷார, ஏஷான் ஆகிய இருவரும் தலா 38 ஓட்டங்களுக்கு  தலா 2 விக்கெட்களையும் விஜயகாந்த் வியாஸ்காந்த் 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்

Previous Post

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து: சவூதி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

Next Post

அலைகளை வென்ற காளி : மண்டாடி! – திரை விமர்சனம்

Next Post
அலைகளை வென்ற காளி : மண்டாடி! – திரை விமர்சனம்

அலைகளை வென்ற காளி : மண்டாடி! - திரை விமர்சனம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

October 14, 2026
அலைகளை வென்ற காளி : மண்டாடி! – திரை விமர்சனம்

அலைகளை வென்ற காளி : மண்டாடி! – திரை விமர்சனம்

October 14, 2026
நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் அபராம்; இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

October 14, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து: சவூதி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

October 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures