இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அவரைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார்.
தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 13,000 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களைப் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதற்காக இன்றைய தினம் காலை 10.55 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் பூங்கொத்து வழங்கி உற்சாகமாக வரவேற்பளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
சென்னையில் இன்று நடைபெறும் பிரதமரின் நிகழ்வுகள் அனைத்திலும் தமிழக முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.













