தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை – குணசித்திரம்- கதையின் நாயகன் – என அனைத்து தளங்களிலும் முன்னணி நட்சத்திரமாக திகழும் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிங்காரம் படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கே. வி. கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தில் யோகி பாபு, வேல. ராமமூர்த்தி, விச்சு விஸ்வநாத், படவா கோபி, சென்ராயன், தீபா சங்கர், சாம்ஸ், ‘கல்கி’ ராஜா, சபிதா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.
கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் அறிமுக காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தற்காலத்திய தமிழக அரசியல் பின்னணி இடம்பிடித்திருப்பதால் ..இந்த காணொளிக்கான வரவேற்பு இணையவாசிகளிடம் அதிகரித்திருக்கிறது.












