Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

September 25, 2026
in News
0
குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

ஹெடிங்லே, லீட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் குவித்த அபார சதம், துனித் வெல்லாலகேவின் சிறப்பான பந்துவீச்சு என்பன இலங்கையை 16 ஓட்டங்களால் வெற்றிபெறச் செய்தன.

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை இந்த சுற்றுப் பயணத்தில் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1 – 1 என இலங்கை சமப்படுத்திக்கொண்டுள்ளது.

ஹெடிங்லேயில் 2019 இல் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற கடைசி வெளிநாட்டு ஒருநாள் வெற்றிக்கு பின்னர் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் இலங்கை அணி கடுமையாக போராடி வெற்றிபெற்றுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தில் முதல் தடவையாக ஒரு வித்தியாசமான உத்வேகத்தடன் இலங்கை அணி விளையாடியதை  அவதானிக்க முடிந்தது.

குசல் மெண்டிஸ் குவித்த ஏழாவது ஒருநாள் கிரிக்கெட் சதம், கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, ஜனித் லியனகே ஆகியோரின் சிறந்த துடுப்பாட்ட பங்களிப்பு என்பன இலங்கைக்கு பெரிதும் கைகொடுத்தன.

அதேவேளை, குசல் மெண்டிஸின் சிறப்பான தலைமைத்துவமும் அவர் வகுத்த கள வியூகங்களும் இங்கிலாந்துக்கு தோல்வியை கொடுத்தது.

மேலும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஜொஸ் பட்லர் தசைப்பிடிப்புக்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்றதும் இலங்கைக்கு சாதகமாக அமைந்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 321 ஓட்டங்களைக் குவித்தது.

குசல் மெண்டிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 100 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 121 ஓட்டங்களைப் பெற்றார்.

கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் பவன் ரத்நாயக்க 48 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 32 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரெஹான் அஹ்மத் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 305  ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

டொம் பென்டன் (73), பென் டக்கெட் (67) ஆகிய இருவரும் 143 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து 38ஆவது ஓவரில் இங்கிலாந்து 4 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தபோது தசைப் பிடிப்புக்குள்ளான ஜொஸ் பட்லர் தற்காலிக ஓய்வு பெற்றார். அவர் அப்போது 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

வில் ஜெக்ஸுடன் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையிலேயே பட்லர் ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அடுத்த 5 விக்கெட்களை வீழ்த்திய இலங்கை அபார வெற்றியீட்டியது.

7ஆவது விக்கெட் வீழ்ந்ததும் மீண்டும் துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழைந்த ஜொஸ் பட்லர் மேலும் 2 ஓட்டங்களைப் பெற்று 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

வில் ஜெக்ஸ் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Previous Post

மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்திய கண்காட்சி

Next Post

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

Next Post
ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் 'பத்தா' திரைப்படத்தின் முன்னோட்டம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

September 25, 2026
குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

September 25, 2026
மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்திய கண்காட்சி

மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்திய கண்காட்சி

September 25, 2026
வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் தம்மிக படபெந்தி

வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் தம்மிக படபெந்தி

September 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures