Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம் அதிர்ச்சித் தோல்வி

September 5, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம் அதிர்ச்சித் தோல்வி

கொழும்பு சுகததாச அரங்கில்  வெள்ளிக்கிழமை (4) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் கொட்டாஞ்சேனை றினோன் கழகத்தை எதிர்த்தாடிய புளூ ஈக்ள்ஸ் கழகம் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத வெற்றியை ஈட்டியது.

இதன் மூலம் ஏழாவது வாரம் வரை தோல்வி அடையாமல் இருந்த றினோன் கழகம் இந்த சுற்றுப் போட்டியில் முதல் தடவையாக தோல்வியைத் தழுவியது.

இந்த கால்பந்தாட்டப்  போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் றினோன் கழகம் தனது முதல் நிலை வீரர்களுக்கு போட்டியின் முதலாவது பகுதியில் ஓய்வு வழங்கியிருந்தது.

குறிப்பாக அணித் தலைவர் மொஹமத் ரிஸ்னி, பரீக் அஹமத், மொஹமத் முஜீப் ஆகியோர் முதலாவது பகுதியில் விளையாடதது றினோன் அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்ததுடன் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

இடைவேளைக்குப் பின்னர் வழமையான வீரர்களை றினோன் களம் இறக்கிய போதிலும் அதனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இந்தப் போட்டியில் புளூ ஈக்ள்ஸ் கழக வீரர்களின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதில் றினோன் கழக வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

எவ்வாறாயினும் அனுபவசாலியான பின்கள வீரர் கமீல் ஹக்கீம், இளம் பின்கள வீரர் நதீம் அஹமத், முன்கள வீரர் கிறிஸ்டியன் அஞ்சே ஆகிய மூவரும் மிகத் திறமையாக விளையாடினர்.

போட்டியின் 22ஆவது நிமிடத்தில் புளூ ஈக்ள்ஸ் கழகத்தின் வெளிநாட்டு வீரர் டோக்கு பீலிக்ஸ் உதைத்த பந்து கோல் குறுக்கு கம்பத்தில் பட்டு வெளியேறியது.

அதனைத் தொடர்ந்து மேலும் சில வாய்ப்புகளை புளூ ஈக்ள்ஸ் தவறவிட்டது.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் புளூ ஈக்ள்ஸ் வீரர் பிராஸ் ஸஹீர் இடதுபுறத்திலிருந்து உயர்வாக பறிமாறிய பந்தை கணேசன் சதீஸ் தலையால் முட்டி முதலாவது கோலை போட்டார்.

அடுத்த நிமிடம் றீனோன் கழக பின்களத்தில் ஏற்பட்ட தவறை நன்கு பயன்படுத்திக்கொண்ட கவிந்து நெத்சார தனது அணியின் இரண்டாவது கோலை போட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் றினோன் கழகம் தனது வழமையான 3 வீரர்களை மாற்று வீரர்களாக களம் இறக்கி கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது.

ஆனால், புளூ ஈக்ள்ஸ் கழகத்தின் பின்கள வீரர்கள் மிகத் திறமையாக தடுத்தாடும் உத்தியைக் கையாண்டு எதிரணியின் முயற்சிகளை முறியடித்தனர்.

இந்தப் போட்டியில் இரண்டு அணி வீரர்களும் முரட்டுத்தனமாக விளையாடியதால் புளூ ஈக்ள்ஸ்  கழக  வீரர்கள் நால்வருக்கும் றினோன் கழக வீரர்கள் இருவருக்கும் மத்தியஸ்தர் இந்துனில் சந்தகெலும் மஞ்சள் அட்டைகளைக் காட்டி எச்சரித்தார்.

இந்தப் போட்டி முடிவை அடுத்து  புளூ ஈக்ள்ஸ் கழகம் 10 புள்ளிகளைப் பெற்று 6ஆவது இடத்தில் இருக்கிறது.

Previous Post

நாமல் ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் | குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

Next Post

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா

Next Post
விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்ஷவுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கத் தயார் – தலதா அத்துகோரள

September 6, 2026
உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்; புதிய வரைபடத்தை ஏற்றுக்கொண்டது பிரான்ஸ்

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம்; புதிய வரைபடத்தை ஏற்றுக்கொண்டது பிரான்ஸ்

September 6, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

திருடன் – பொலிஸ் விளையாட்டிலிருந்த கறுப்பு அரசை அடியோடு ஒழிப்போம் | ஜனாதிபதி சூளுரை

September 6, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

September 6, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures